திருவள்ளூர் வடக்கு மாவட்டம்: சாதியாணி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சாதியாணி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் அருகே அரசு மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர், வழக்கறிஞர் திரு. விஜயகுமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சாதியாணி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும், சமூக சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

12 Mar 2026