திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இலட்சிவாக்கம் கிளை சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் திருமதி செல்வி பழனி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. தண்டலம் K. உதயகுமார் மற்றும் ஒன்றிய இணை செயலாளர் திரு. இ. பிரதாப் அவர்களின் முன்னிலையில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சமூக சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். நிகழ்ச்சி பொதுமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.