திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயலில், பழைய பேட்டரிகளை மறுசுழற்சி செய்து புதிய பேட்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலையின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்கள் கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும், "ஒரு ரூபாய் கூட கமிஷன் கொடுக்காமல் தொழில் தொடங்க உதவுவோம்" என உறுதியளித்தார்.
மேலும், தொழில் வளர்ச்சி மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், கும்மிடிப்பூண்டியை தொழில் வளர்ச்சியின் முன்னணி மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழில் முனைவோர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
🚩 தொழில் வளர்ச்சி • வேலைவாய்ப்பு உருவாக்கம் • மக்கள் முன்னேற்றம்