தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழகத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். கழக நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி, கழகத்தின் கொள்கைகள் மற்றும் மக்கள் நல நோக்கங்களை எடுத்துரைத்தனர்.
மக்கள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.