வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வெற்றித் தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின்படியும், பொதுச்செயலாளர் அவர்களின் ஆலோசனையின் பேரிலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் திரு. S. விஜயகுமார், B.Sc., B.L. அவர்களின் தலைமையிலும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகப் பொருளாளர் திரு. G. கிருபாகரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி ஆகிய கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் பணிகள் மற்றும் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நேற்று (15.03.2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து ஒன்றிய மற்றும் பேரூராட்சி கழகச் செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். மேலும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. தண்டலம் K. உதயகுமார் அவர்கள் உட்பட ஒன்றிய தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
—
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் – IT WING 🚩