தமிழக வெற்றி கழகம் – தேர்தல் பணி தீவிரம்

எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட கழக செயலாளர், வழக்கறிஞர் திரு. S. விஜயகுமார், B.Sc., B.L. அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஒன்றிய செயலாளர் தண்டலம் திரு. K. உதயகுமார், B.A. அவர்களின் தலைமையிலும், நிர்வாகிகள் இணைந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணியில் மக்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மாற்றத்திற்கான ஆவலை வெளிப்படுத்தி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வரவிருக்கும் தேர்தலில் “விசில்” சின்னத்திற்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துமாறு பொதுமக்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

23 Mar 2026