மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,கழகப் பொதுச்செயலாளர் திரு. N.ஆனந்த் MLA அவர்களின் ஆலோசனைப்படி,
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. விஜயகுமார், B.Sc., B.L., அவர்களின் உத்தரவின் பேரில்,
கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ANJAN DRUG PVT LTD நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட நிழற்கூரை, நேற்று (04.06.2026) கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. விஜயகுமார், B.Sc., B.L., அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
மாணவிகளின் நலனையும் வசதியையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மக்கள் நலப் பணிக்காக நிறுவனத்திற்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.