மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம்,
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி , சிறுபுழல்பேட்டை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை,
இன்று 14.07.2026 காலை, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாண்புமிகு மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. ஆர்.குமார் அவர்கள்,
மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ். கவிதா இ.ஆ.ப. அவர்கள்,
மதிப்பிற்குரிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.விஜயகுமார், B.Sc.,B.L., அவர்கள்,
சுகாதாரத் துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மாவட்ட உயர் அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
புதிய துணை சுகாதார நிலையக் கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம், சிறுபழவேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தரமான மருத்துவ சேவைகளை எளிதில் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இத்திட்டத்தை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அப்பகுதி மக்கள் வரவேற்று, தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.