தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு தமிழ்நாடு *முதலமைச்சர்* அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை *அமைச்சர்* அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
*திருவள்ளூர் மாவட்டம்*
*கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட* ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சிறப்பு நலத்திட்ட முகாம் இன்று நடைபெற்றது.

இந்த முகாமில், *தூய்மைப் பணியாளர்களுக்கு* சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு, திறன் மேம்பாடு, நலத்திட்டங்கள், உரிமைகள் மற்றும் நீதி சார்ந்த பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், அவற்றின் பயன்களை பெற தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில், *கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்*
திரு.ச.விஜயகுமார் B.Sc., B.L. MLA
அவர்கள் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய முகாம்கள் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக மரியாதை மேலும் உயர்வடையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த முகாமை தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, தமிழ்நாடு அரசின் மக்கள் நல அணுகுமுறைக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர், மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

24 Jul 2026